இங்கே முதல்வர் வேட்பாளர் பற்றிய விவாதம்…! சொந்த ஊரில் ஓபிஎஸ்ஸை ஆதரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்

தேனி: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் தேனியில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் தான் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் களம் ஆரம்பித்து விட்டது. விரைவில் இந்த தேர்தல் பற்றிய அறிவிப்புகள் எழலாம் என்று நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

அமைச்சர்கள் தரப்பில் பல கருத்துகள் வெளிப்பட்டன.  இந் நிலையில் தேனி, போடி பகுதிகளில் தமிழகத்தின் அடுத்த தமிழக முதல்வர் ஓபிஎஸ் தான் என்று  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த பரபரப்பு போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Having 20 years experience in the field of Journalism in various positions.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே