இராமநாதபுரத்தில் SI உட்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ உட்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுர மாவட்டத்தில் 2249 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1384 பேர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மாவட்ட அதிகாரிகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவற்றின் ஒருபகுதியாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அதில், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

மேலும், அவர்கள் வசித்த பகுதிகளில் பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகின்றனர்.

இதுபோன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அதிகாரிகளும், மருத்துவர்களும் தினந்தோறும் திணறி வருகின்றனர்.

மேலும், கொரோனா தடுப்பு பணியில் முக்கிய களப்பணியார்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோருக்கும் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதில் பலரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஐ உட்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால், 4 காவலர்களையும் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே