தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக்கடைகள் மூடல்

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர்,ஜெயராஜ். 

இவருடைய மகன் பென்னிக்ஸ்(31) . இவர் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு அதிக நேரம் கடையை ஜெயராஜ் திறந்து வைத்திருந்ததால் போலீஸ் அவரை எச்சரித்துள்ளார்.

மேலும் இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனை கண்ட ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த போலீசாரிடம் சென்று சமாதானம் பேசியுள்ளார்.

பின்னர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீது போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்து பிறகு கைது செய்து, ஜெயராஜ் , பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 21ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

பின்னர் இருவரும் இந்நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடுமுழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.,”தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.

தொடர்ந்து, நாளை மாலை 5 மணிக்கு அந்தந்த சங்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்.

இந்த ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே.

தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேரடியாக பேரமைப்பு நிர்வாகிகள் சென்று புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடைபெறும்” என்றார்.

மேலும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மருந்து வணிகர்கள் சங்கமும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகளை மூட ஆதரவளித்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே