தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதனால் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், மேலும் தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்தது, இந்நிலையில் தமிழக பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தலைவராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு அடிபட்டு வருகிறது. இதுபற்றி தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களிடம் கேட்டதற்கு இதுபற்றி அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள் .
- காதலிக்காக செலவழித்த பணத்தை திருப்பி வாங்கித்தரக் கூறி காவல் நிலையத்தில் ரகளை
- புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் தப்பிய ரவுடி, வெட்டிப் படுகொலை