ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி கூறுகையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி உணவு தேர்வுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
இன்றைய கால கட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக குழந்தையின்மை பிரச்சனை மிகவும் அதிகரித்துள்ளது. ஆண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு இருக்கும் சில குறைபாடுகள் காரணமாக குழந்தைப் பேறு உண்டாகுவதில் சிக்கல் வருகிறது.
அதில் ஒன்று விந்தணு எண்ணிக்கை குறைவு. அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருப்பதில்லை.
சராசரி விந்தணு எண்ணிக்கை குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சராசரி அளவு, ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியன் உயிரணுக்கள் ஆகும்.
இந்நிலையில், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய சில உணவுகளை சாப்பிடுவதால், ஆண்கள் பாலியல் தொடர்பான உடல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அத்தனையை சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. முட்டைகள்
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சூப்பர் ஃபுட் எனலாம். விந்தணுக்களின் இயக்கத்துக்கு உதவும் வைட்டமின் ஈ மற்றும் புரதம் முட்டையில் நிறைந்துள்ளது.
உணவில் முட்டை சேர்ப்பதன் மூலம் விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. முட்டைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது.
இது விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்தி, ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மேம்படுத்தவும், முட்டையை உணவில் சேர்த்து கொள்ளவும்.
2. பூசணி விதைகள்
பூசணி விதைகளில் அதிக அளவு துத்தநாகம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இவை இரண்டும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஈ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் கொண்டுள்ள ஆளிவிதைகள், சியா விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகளையும் உட்கொள்ளலாம்.
3. மாதுளை
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுப் பட்டியலில் மாதுளைக்கு சிறப்பான இடம் உண்டு. கருவுறும் வாய்ப்பை மேம்படுத்த மாதுளம் பழம் மற்றும் சாற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். மாதுளை பழம் மற்றும் சாறு விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
4. கொழுப்பு நிறைந்த மீன்
தரமான விந்தணுக்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. எனவே இந்த சத்துக்களைப் பெற, சால்மன், நெத்திலி உள்ளிட்ட பல வகையான கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ளலாம்.