வயாகரா பற்றிய சந்தேகங்களும்.. விளக்கமும்…

பாலியல் ரீதியான குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் வயாகரா, வேறு பல மருத்துவ முக்கியத்துவங்களையும் கொண்டது.

எனவே, இதுபற்றிய பல தகவல்கள் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

விறைப்புதன்மை இல்லாமல் இருத்தல் பிரச்சனையால் அவதியுறும் ஆண்களுக்கு இம்மருந்து உதவி புரியும் என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.

அதே நேரம், பிற மருந்துகளை போல, இம்மருந்தும் சில பக்க விளைவுகளையும் உண்டாக்கும்.

சரி… இந்த வயகரா கனெக்டை வாங்கும் போது ஆண்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விறைப்புதன்மை இல்லாமல் அவதியுறும் ஆண்கள் இம்மருந்தினை எடுத்து கொள்ளலாம்.

ஆனால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இம்மருந்தினை வாங்க முடியாது.

பெண்கள், தங்கள் இணையருக்காக வாங்கலாம். ஆனால், அதற்கும் மருந்தாளுனரின் ஒப்புதல் தேவை.

உடலுறவு கொள்ள தகுதியற்ற ஆண்கள் இம்மருந்தினை வாங்க முடியாது.

அதாவது தீவிர இதய நோய் மற்றும் இரத்த நாளம் பிரச்சனை உள்ளவர்கள் இம்மருந்தினை வாங்க முடியாது.

இம்மருந்தினை வாங்குவதற்கு முன் யாருடனாவது கலந்தாலோசிக்க வேண்டுமா மற்றும் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமா?

மருந்தாளுனரிடம் உரையாடினாலே போதுமானது. உங்களது உடல்நிலை குறித்து அவருடன் ஆலோசித்து இம்மருந்தினை வாங்கலாம்.

உடல் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை.

இம்மருந்து உண்மையிலேயே பலன் தருமா?

பெரும்பாலான சமயங்களில் இது பலன் தருகிறது. ஆனால், அனைவருக்கும் இது ஒரே மாதிரியான பலன் தராது.

இம்மருந்து ஆண்குறியில் உள்ள ரத்த நாளங்களை தளர்வடைய செய்து, ரத்த ஓட்டத்திற்கு உதவி செய்கிறது.

இது உணவு அருந்தியோ அல்லது உணவு அருந்தாமலோ எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

உணவு உண்ட 45 நிமிடங்கள் கழித்து வயாகரா உட்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பின்னர் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது நல்லது.

விறைப்புத்தன்மை நார்மலாக உள்ளவர்கள் இந்த மாத்திரையைத் தவிர்க்க வேண்டும்.

என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படலாம்?

தலைவலி

தலைசுற்றல்

மூக்கடைப்பு

குமட்டல்

அதே நேரம் நெஞ்சு வலி, பார்வை குறைபாடு ஏறப்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இணையத்தில் வாங்க முடியுமா?

வாங்கலாம்… ஆனால், மருந்தாளுநருடன் ஓர் இணையவழி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல், உலகினில் திருட்டுத்தனமாக விற்கப்படும் போதை மருந்துகளில் ஒன்றாக வயாகரா மாறிவிட்டது.

மருத்துவ வல்லுனர் கூற்றுப்படி கலப்படம் இல்லாத, உண்மையான வயாகரா மாத்திரையை பெறுவது கடினம் என்பதுதான் இன்றைய நிதர்சனம்.

மருத்துவரின் பரிந்துரை அவசியம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதன் காரணம் இதுதான்!!!

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே