பேறு காலத்திற்கு பின் உடலுறவில் ஏற்படும் சங்கடங்கள்…!!

உடலுறவு என்பது உடல் ரீதியாக இணைவது அல்ல. மன ரீதியாக ஒருவர் மீது நம்பிக்கை, காதல் ஏற்பட்டு உண்டாகும் ஒரு காரியம்.

குழந்தை பிறந்து முதல் ஒரு வருட காலம் பெண்கள் உடல்ரீதியாக சிரமம் இருக்கும்.

அதிலும் முதல் குழந்தை பெற்ற பிறகு குழந்தைகளை எப்படி கையாள வேண்டும், குளிப்பாட்ட வேண்டும், சோறூட்ட வேண்டும் என எதுவும் அவர்களுக்கு பெரிதாக தெரிய வாய்ப்பில்லை.

எனவே, டயப்பர் மாற்றுவதில் இருந்து குழந்தையை உறங்க வைப்பது வரை அவர் மிகுந்த மன மற்றும் உடல் அலைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதனால் ஏற்படும் அசதி காரணத்தாலும் கூட பெண் கணவனுடன் உடலுறவு கொள்ள மறுப்பு தெரிவிக்கிறாள்.

சமநிலை இன்மை காரணத்தால் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு நிலையில் அவரால் இயங்க முடியாமல் போகிறது.

இதை எல்லாம் ஒரு பெண் முதல் முறை தாய்மை அடையும் போது கடந்து வர ஒரு குறிப்பிட்ட காலம் பிடிக்கும்.

ஒரு சிலர் ஆறு மாதத்திற்குள் சரியாகி விடுவார்கள். ஒருசிலர் ஓராண்டு காலம் கூட பிடிக்கலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கிறமாதிரி உணர்கிறார்கள். அந்த வலியை தவிர்க்க கூட தாம்பத்தியத்தில் ஈடுபட சில பெண்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

சிலருக்கு உடல் எடை அதிகரித்திருக்கும். பெண்ணுறுப்பு பகுதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். உட்காயங்கள் அல்லது எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும்.

இதனால் பெண்கள் உடலுறவு கொள்வதில் போதுமான அக்கறை செலுத்தாமல் போகலாம்.

சுகப்பிரசவம் மட்டுமல்ல, சிசேரியன் செய்துக் கொள்ளும் பெண்கள் மத்தியிலும் இந்த வலிமிகு புணர்ச்சி காணப்படுகிறது.

சிசேரியன் முறையில் குழந்தை பெற்ற 40.7% பெண்கள் மற்றும் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்ற 26.2% பெண்கள் இதை கடந்து வருகிறார்கள் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தை பிறந்த பிறகு தாய் பால் அளிக்கும் வரையில் கூட பெண்களுக்கு உடலுறவு கொள்ள விரும்புவது இல்லை..

தாய்ப்பால் சுரக்க வேண்டிய சுரப்பிகள் அதிகமாக வேலை செய்துக் கொண்டிருப்பதால் குழந்தைக்கு தாய்ப்பால் அளித்தல் மிகவும் அவசியமாகிறது.

இதனால் கூட சில பெண்கள் உடலுறவு கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

சில பெண்கள் பிரசவத்திற்கு பிறகு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதை கண்டு தன்னம்பிக்கை இழக்கிறார்கள்.

எங்கே இந்த உடல் கணவனுக்கு பிடிக்காதோ என்றும், இதனால் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது சங்கடங்கள் உண்டாகுமோ என்றும் அஞ்சுகிறார்கள்.

இதன் காரணமாக கூட அவர்கள் உடலுறவில் இணைய தவிர்த்து விடுகிறார்கள்.

கணவர்கள் செக்ஸ் வாழ்க்கையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, நீங்கள் மனைவியுடன் இருந்தால் போதும், உங்கள் அரவணைப்பு, அக்கறை, உதவி போன்றவற்றை எல்லாம் அவர்களுக்கு அதிகமாக தேவைப்படும்.

நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.

இவையெல்லாம் சரியான முறையில் உங்களிடமிருந்து கிடைத்துவிட்டாலே போதும், அவர்களுக்குள் மீண்டும் பழைய உற்சாகம் பிறக்க நிறைய வாய்ப்புகள் அதிகம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே